வியாழன், 28/11/24, 10:17 AM
Welcome, Guest
Home » Articles » அறிவியற்களம் » விநோதங்கள் [ Add new entry ]

கண் தெரியாத, கால் இல்லாத பல்லி இனம் கண்டுபிடிப்பு

கண் தெரியாத, கால் இல்லாத புதிய வகை பல்லி இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவை 6 அங்குலம் நீளமானதக காணப்படுகின்றன.  இந்த ஊர்வன இனம் தென்கிழக்கு ஆசிய நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை டிபாமஸ் டெலைன்சிஸ் என்கின்றனர்.

கடந்த தசாப்தங்களில் கண்டுபிடிக்கப்பட்ட 200 கால் இல்லாத பல்லி இனங்களுடனும் 50 மேலதிக ஊர்வன இனங்களுடனும் இது சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள கார்டமம் மலைப் பிரதேசத்தில் இந்த புதிய வகை பல்லி இனத்தை Fauna & Flora International  இன் Herpetologist  கண்டுபிடித்துள்ளார்.

‘முதலில் நான் இதை ஒரு பொதுவான உயிரின வகை எனத் தான் நினைத்தேன். ஆனால், அதனை உற்று நோக்கும்போது தான் என்னால் அடையாளங்காண முடியாத ஒன்றாக இருப்பதை உணர்ந்தேன்’ என அவர் ஊடக வெளியீடு ஒன்றிற்குத் தெரிவித்தார்.

தற்போது சில ஆண்டுகளாகத் தான் கார்டமம் பகுதியில் புதிய வகை உயிரினங்கள் இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. காரணம் அந்தப் பகுதி 1990ஆம் ஆண்டு வரை மூடப்பட்டு இருந்தது.

‘நாங்கள் மிகக் கஷ்டப்பட்டுத்தான் இந்தப் பகுதிகளில் விலங்கினங்கள் இருக்கின்றனவா என்பதைத் தெரிந்துகொண்டோம்’ என Fauna & Flora International  இன் உயிரியலாளர் ஜெனி டெல்ட்ரி தெரிவித்தார்.

க்மர் ரௌச் பகுதி ஒரு கம்யூனிச செயற்பாடுள்ள பகுதியாக கம்போடியாவின் கட்டுப்பாட்டில் 1975 முதல் 1979 வரை இருந்தது. பின்னர் 1998ஆம் ஆண்டு தான் கம்போடியாவின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

அங்குள்ள கார்டமம் மலைப்பகுதியில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் வரை விலங்குகள் குறித்த ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. தற்போது தான் புதிய வகை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது என அவர் தேசிய புவியியலாய்வு செய்திகளுக்குத் தெரிவித்தார்.

கண் தெரியாத மற்றும் கால் இல்லாத இந்தப் பல்லி இனம் அமெரிக்காவைச் சார்ந்தவை. ஆனால், 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இவை வழுக்கிக் கடந்து சென்று பெர்லின் ஸ்ட்ரெய்ட் மற்றும் இன்டோ ஏசியாவை அடைந்தது.

ஏனைய நவீன கால் இல்லாத பல்லி இனங்களைப் போலவே இவையும் கண்களும் கால்களும் தேவைப்படாத நிலத்திற்கடியில் வாழக்கூடியவை என டெல்ட்ரி தெரிவித்தார். சில ஆராய்ச்சியாளர்கள் இந்த பல்லிகள் தமது மூக்கின் மூலமாக நிலப்புழுக்கள், எறும்புகள் மற்றும் கரையான்களைப் பிடித்து உண்பதாகத் தெரிவித்துள்ளனர்.

‘உண்மையில் எங்களுக்கு இதன் பெயர் மட்டும் தான் தெரியும். இது ஒரு அரிய வகை உயிரினமாக இருக்கக் கூடும்’ என டெல்ட்ரி மேலும் தெரிவித்தார்.

Category: விநோதங்கள் | Added by: tamil (17/05/11)
Views: 1471 | Rating: 0.0/0
Total comments: 0
Only registered users can add comments.
[ Sign Up | Log In ]